இன்று ஒரு மாயாஜால மோதலுக்கு தயாராவோம் - CSK வீரர் ரவீந்திர ஜடேஜா
ஐபிஎல் இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், CSK அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மழையால் ரத்து
2023 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக ஆட்டம் கை விடப்பட்டது.
பின்னர் மறுநாள் (இன்று) இறுதிப்போட்டி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது. இதனால் இரு அணி ரசிகர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
ஆனாலும் இன்றும் மழைப்பொழிவு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பத்தி ராயுடு தனது ஓய்வை நேற்று அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
IPL/BCCI
ஜடேஜாவின் பதிவு
இந்நிலையில், CSKவின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'ரசிகர்களின் அனுபவத்தை மதிப்பிடுவதற்கு, ஐபிஎல் இறுதிப் போட்டியின் ஒவ்வொரு தருணமும் காத்திருப்பதற்கு மதிப்புள்ளது என்பதை உறுதி செய்ததற்காகவும் BCCIக்கு வாழ்த்துக்கள்! நாளை (இன்று) ஒரு மாயாஜால மோதலுக்கு ஆயத்தப்படுவோம், அது நம் அனைவரையும் மயக்கும்' என கூறியுள்ளார்.
Kudos to @Bcci for valuing the fans' experience and making sure that every moment of the IPL final is worth the wait! ?
— Ravindrasinh jadeja (@imjadeja) May 28, 2023
Let's gear up for a magical showdown tomorrow that will leave us all spellbound! ??
IPL/BCCI/PTI