இமாலய இலக்கை துரத்தி பிடித்த மும்பை இந்தியன்ஸ்: அதிர்ச்சியில் பஞ்சாப் கிங்ஸ் ரசிகர்கள்
பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இலக்கை நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்
ஐபிஎல்-லின் 46வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி இன்று எதிர்கொண்டது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
Cricbuzz
இதனால் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ஓட்டங்கள் சேர்த்தது.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக லிவிங்ஸ்டோன் 42 பந்துகளில் 82 ஓட்டங்கள் குவித்தார், அவரை தொடர்ந்து ஜிதேஷ் சர்மா 27 பந்துகளில் 49 ஓட்டங்கள் குவித்து இருந்தார்.
Cricbuzz
துரத்தி பிடித்த மும்பை இந்தியன்ஸ்
இதையடுத்து இமாலய இலக்குடன் இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின், தொடக்க வீரர் இஷான் கிஷன் 41 பந்துகளில் 75 ஓட்டங்கள் அதிரடியாக குவித்தார்.
மறுபுறம் சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில் 66 ஓட்டங்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
EK NUMBERRRRRRRRRRR CHASE, ONCE AGAIN! ?#OneFamily #PBKSvMI #MumbaiMeriJaan #MumbaiIndians #TATAIPL #IPL2023 pic.twitter.com/4DKYOkB0VN
— Mumbai Indians (@mipaltan) May 3, 2023
இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 18.5 ஓவர்கள் முடிவில் வெற்றி இலக்கான 216 ஓட்டங்களை அடைந்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.