வீணான ஜெய்ஸ்வால் அதிரடி சதம்: வரலாற்று வெற்றியை பதிவு செய்த மும்பை அணி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
சதம் விளாசிய ஜெய்ஸ்வால்
வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெற்ற ஐபிஎல்-லின் 42வது லீக் போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியின் முதல் பேட்டிங்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கிய நிலையில், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது முதல் ஐபிஎல் சதத்தை பூர்த்தி செய்தார்.
The Hundred moment of Jaiswal.
— Johns. (@CricCrazyJohns) April 30, 2023
A special player loading for India.pic.twitter.com/LpxFj0hFAm
62 பந்துகளை எதிர்கொண்ட ஜெய்ஸ்வால், 16 பவுண்டரிகள், 8 சிக்சர்கள் விளாசி 124 ஓட்டங்கள் குவித்தார்.
இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 212 ஓட்டங்கள் சேர்த்தனர்.
துரத்தி பிடித்த மும்பை இந்தியன்ஸ்
கடினமான இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய நிலையில், கேப்டன் ரோகித் சர்மா 3 ஓட்டங்களுக்கு வெளியேறி அதிர்ச்சி தந்தார்.
Surya, you are unbelievable. ☀️💙#OneFamily #MIvRR #MumbaiMeriJaan #MumbaiIndians #TATAIPL #IPL2023 @surya_14kumar pic.twitter.com/SHFP5RVJMc
— Mumbai Indians (@mipaltan) April 30, 2023
ஆனால் இஷான் கிஷன் (28) கேமரூன் கிரீன்(44) சூர்யகுமார் யாதவ்(55) திலக் வர்மா(29) என மும்பை அணி வீரர்கள் சீரான ஓட்டங்களை குவித்தனர்.
இருப்பினும் கடைசி 12 பந்துகளுக்கு 32 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், மும்பை வீரர் டிம் டேவிட் பந்துகளை சிக்ஸர்களுக்கு பறக்க விட்டார்.
14 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட டிம் டேவிட், 2 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் விளாசி 45 ஓட்டங்கள் குவித்தார்.
Tim David the giant monster and the future of Mumbai Indians 💙.pic.twitter.com/kaXi4i9uF9
— Vishal. (@SPORTYVISHAL) April 30, 2023
இதன்மூலம் மும்பை அணி 19.3 ஓவர்கள் முடிவிலேயே 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 214 ஓட்டங்கள் சேர்த்தது.
மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி வெற்றியை கைப்பற்றியது.
அத்துடன் மும்பை வான்கடே மைதானத்தில் முதல் மிகப்பெரிய சேஸிங் வெற்றியை பதிவு செய்த அணி என்ற பெருமையையும் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றுள்ளது.
IPL game number 1️⃣𝗞. The finish, 2️⃣4️⃣𝗞. 🤌 🥳#OneFamily #MIvRR #MumbaiMeriJaan #MumbaiIndians #TATAIPL #IPL2023 @timdavid8 @TilakV9 pic.twitter.com/4DdFTKf0u9
— Mumbai Indians (@mipaltan) April 30, 2023