ஐபிஎல் தொடர் - இன்று லக்னோ - மும்பை நேருக்கு நேர் மோதல்
இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரில் லக்னோ-மும்பை அணி நேருக்கு நேர் மோத உள்ளது.
லக்னோ - மும்பை நேருக்கு நேர் மோதல்
தற்போது 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவில் உள்ள பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2 பிரிவாக பிரிக்கப்பட்ட ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஐபிஎல் தொடரின் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறிச் செல்லும்.
இந்நிலையில், இன்று லக்னோவில் 63-வது லீக் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளன.
இதுவரை நடைப்பெற்ற ஐபிஎல் தொடரில் லக்னோவுடன் 2 போட்டிகளில் மும்பை அணி விளையாடியுள்ளது. இந்த 2 போட்டிகளிலும் லக்னோவிடம் மும்பை தோற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெறும் போட்டியில் மும்பை அணி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Mumbai Indians and Lucknow Super Giants are all set to leave it all on the field! It's a must-win game for both teams! #TATAIPL2023 #MIvsLSG pic.twitter.com/GEQIxYMnKV
— Naveen (@Naveenramsena) May 16, 2023