பஞ்சாப் அணியை பந்தாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்! 257 ஓட்டங்கள் குவித்து அபார வெற்றி
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ருத்ர தாண்டவம் ஆடிய லக்னோ
ஐபிஎல்-லில் இன்று நடைபெற்ற 38 லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதல் பேட்டிங்கில் களமிறங்கிய லக்னோ அணியில் கேப்டன் கே.எல் ராகுல் 9 பந்துகளில் 12 ஓட்டங்கள் குவித்து இருந்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தார்.
#PBKSvLSG #PBKSvLSG #IPL2023
— TOI Sports (@toisports) April 28, 2023
Lucknow Super Giants 257/5 in 20 overs vs Punjab Kings
Marcus Stoinis 72, Kyle Mayers 54, Nicholas Pooran 45, Ayush Badoni 43
Kagiso Rabada 2/52
This is second highest team total in IPL history after RCB's 263/5 in 2013
FOLLOW LIVE:… pic.twitter.com/zvCwY89jrO
ஆனால் பின்னர் வந்த லக்னோ அணி பேட்ஸ்மேன்கள் பஞ்சாப் அணி பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் பந்தாடினர். லக்னோ அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய மேயர்ஸ் 24 பந்துகளில் 54 ஓட்டங்களையும், பின்னர் வந்த ஆயுஷ் படோனி 24 பந்துகளில் 43 ஓட்டங்களும், ஸ்டோனிஸ் 40 பந்துகளில் 72 ஓட்டங்களும் குவித்து அசத்தினர்.
ஆட்டத்தின் இறுதி நேரத்தில் களமிறங்கிய பூரன் தன்னுடைய பங்கிற்கு 19 பந்துகளில் 45 ஓட்டங்கள் அதிரடியாக குவித்து அணியின் ஓட்டத்தை இமாலய தூரத்திற்கு உயர்த்தினார்.
Not our best night with the ball.
— Punjab Kings (@PunjabKingsIPL) April 28, 2023
Plenty to look back on. #SherSquad, we promise we'll come back stronger. ?#JazbaHaiPunjabi pic.twitter.com/mAwN8prWgT
வீரர்களின் அதிரடியான ஆட்டத்தின் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 257 ஓட்டங்கள் பிரமாண்டமாக குவித்தது.
அபார வெற்றி
இமாலய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர் மற்றும் அணியின் கேப்டனான ஷிகர் தவான் 1 ஓட்டத்துடனும், மற்றொரு தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 9 ஓட்டங்களுடன் வெளியேறி பஞ்சாப் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்தனர்.
ஆனால் பின்னர் வந்த அதர்வ தைடே தன்னுடைய விடா முயற்சியால் 36 பந்துகளில் 66 ஓட்டங்கள் குவித்தார், சிக்கந்தர் ராசா 22 பந்துகளில் 36 ஓட்டங்கள் குவித்தார்.
வெற்றிக்கான இலக்கு மிகப்பெரியது என்பதால், அதனை அதிரடியாக விளையாடி துரத்தி பிடிக்க பஞ்சாப் அணி வீரர்கள் முயன்றதால் விக்கெட்டுகள் ஒருபுறம் மலமலவென சரிந்தது.
இறுதியில் பஞ்சாப் அணியால் 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ஓட்டங்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.
இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியை 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
Ravi Bishnoi picks up his second wicket of the game as Liam Livingstone is given out LBW!
— IndianPremierLeague (@IPL) April 28, 2023
Live - https://t.co/cS0dBLmzWT #TATAIPL #PBKSvLSG #IPL2023 pic.twitter.com/sO7HRwnvH7