IPL 2024:தடுமாறிய லக்னோ அணி! அசத்தல் வெற்றியை பதிவு செய்த டெல்லி
டெல்லி கேபிடல்ஸ் அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
அதிரடி காட்டிய டெல்லி
டெல்லியில் நடைபெற்ற இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ///இதனால் டெல்லி அணி பேட்டிங் செய்ய வந்தபோது, ஓப்பனர் ஜேக் ஃப்ரேசர் இரண்டாவது பந்தில் டக் அவுட் ஆனார்.
அதிரடி காட்டிய அபிஷேக் போரல் (58 ஓட்டங்கள்) மற்றும் ஷாய் ஹோப் (38 ஓட்டங்கள்) குவித்து டெல்லி அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
ரிஷப் பந்த் (33, ஓட்டங்கள்) மற்றும் ட்ரிஸ்டன் (57, ஓட்டங்கள் ) ரன்கள் எடுத்து டெல்லி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதன் மூலம் 20 ஓவர்களில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 208 ஓட்டங்கள் எடுத்தது.
தடுமாறிய லக்னோ
209 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய லக்னோ அணி தொடக்கத்திலேயே தடுமாறின.
We're all in awe, Arshad ?? pic.twitter.com/J0OAgjBeuf
— Lucknow Super Giants (@LucknowIPL) May 14, 2024
கேப்டன் கே.எல்.ராகுல் (5), குயின்டன் டி காக் (12), ஸ்டோய்னிஸ் (5) மற்றும் தீபக் ஹூடா (0) என்ற ஓட்டத்துடன் ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தனர்.
நிக்கோலஸ் பூரன் (61, ஓட்டங்கள்) மற்றும் அர்ஷத் கான் (58, ஓட்டங்கள்) எடுத்து லக்னோ அணியை போட்டியில் நீடிக்க வைத்தனர்.
இருப்பினும், டெல்லி அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதால் லக்னோ அணி 20 ஓவர்களில் 189 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் டெல்லி அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |