53 பண்ணை தொழிலாளர்களுடன் கவிழ்ந்த பேருந்து: 40 பேர் மருத்துவமனையில் அனுமதி!
புளோரிடாவில் விபத்துக்குள்ளான பண்ணை தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
பேருந்து விபத்து
அமெரிக்காவின் புளோரிடாவில் செவ்வாய் காலை நேரத்தில், பண்ணை தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, லாரி ஒன்றுடன் மோதி கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 8 பேர் உயிரிழந்தனர்.
புளோரிடாவில் டன்னெல்லனுக்கு(Dunnellon) அருகில் உள்ள இரண்டு வழி நெடுஞ்சாலையில் State Road 40-ல் காலை 6:35 மணிக்கு தோராயமாக இந்த விபத்து நிகழ்ந்தது.
சுமார் 53 தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சாலைய விட்டு வெளியேறி, கவிழ்ந்தது.
மீட்பு பணி
தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த தொழிலாளர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர்.
காயமடைந்தவர்களில் எட்டு பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். விபத்தின் காரணத்தை ஃபுளோரிடா நெடுஞ்சாலை காவல்துறை விசாரித்து வருகிறது.
சில காயங்களின் தீவிரத்தன்மை காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |