IPL 2024: மிரட்டிய ஸ்டோய்னிஸ்..! MI அணியை வீழ்த்தி லக்னோ அபார வெற்றி
ஐபிஎல்-லில் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
தடுமாறிய மும்பை
லக்னோவில் உள்ள Ekana Cricket Stadium-ல் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது.
மும்பை அணிக்கு துவக்க வீரர்களான ரோகித் சர்மா (4 ஓட்டங்களுக்கும்) மற்றும் இஷான் கிஷன் (32 ஓட்டங்களுக்கும்) வெளியேறி அதிர்ச்சி தந்தனர்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால், மும்பை அணி 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தவித்தது.
Stood like a rock amidst the chaos 💪
— Mumbai Indians (@mipaltan) April 30, 2024
Solid knock, Nehal 💙#MumbaiMeriJaan #MumbaiIndians #LSGvMI | @nehalwadhera pic.twitter.com/3iqRiUBV92
இந்த நிலையில், களமிறங்கிய நேஹல் வதீரா நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடி அணியின் ஓட்ட விகிதத்தை உயர்த்தினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, 46 ஓட்டங்களுக்கு அவுட் ஆனார்.
மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா (0) முதல் பந்திலேயே அவுட் ஆனது அணியினருக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
முடிவில், மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
மிரட்டிய ஸ்டோய்னிஸ்
சுலபமான இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு தொடக்க வீரர் அர்ஷின் குல்கர்னி (0) முதல் ஓவரிலேயே அவுட் ஆனார்.
ஆனால், கேப்டன் கே.எல். ராகுல் (28 ஓட்டங்களும்) மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் (62 ஓட்டங்களும்) எடுத்து சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு நடத்தினர். ஸ்டோய்னிஸ் 44 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
This result feels HUGE 💙 pic.twitter.com/eQ0qOPre30
— Lucknow Super Giants (@LucknowIPL) April 30, 2024
இதன் மூலம், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, இன்று நடைபெற்ற ஐபிஎல் 2024 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |