ஐபிஎல் 2024: எதிர்பாராத திருப்பங்கள்! புது விதிகள் இதோ!
உலகமே எதிர்பார்ப்போடு காத்திருந்த ஐபிஎல் 2024 சீசனில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
IPL 2024
உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2024 சீசன் இன்று சென்னை சேப்பாகம் சிறப்பு துவக்க விழாவுடன் ஆரம்பிக்கவுள்ளது.
இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பலப்பரீட்சை செய்கிறது.
விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் தொடங்க இருக்கும் இந்த சீசனில் புதிய விதிமுறைகள் மட்டும் கட்டுப்பாடுகளை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
வேகப்பந்து வீச்சாளர்கள் 2 பவுன்சர்கள் வீசலாம்(Two Bouncers Per Over)
புதிய விதிமுறையின் படி, இந்த சீசன் பந்து வீச்சாளர்களுக்கு மிக மக்கியமான மாற்றத்தை கொண்டு வருகிறது.
முன்னர் ஓவருக்கு ஒரு பவுன்சர் பந்து மட்டுமே வீச அனுமதி இருந்த நிலையில், இப்போது ஓவருக்கு இரண்டு வேகமான உயர பந்துகளை (பவுன்சர்) வீச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் ரிப்ளே சிஸ்டம்(Smart Reply System)
ஐ.பி.எல், ஸ்மார்ட் ரிப்ளே சிஸ்டம் மூலம் நவீன தொழில்நுட்பத்தை கையில் எடுத்துள்ளது.
இந்த அமைப்பு, மைதானம் முழுவதும் மூலோபாய ரீதியாக வைக்கப்பட்ட எட்டு ஹை ஸ்பீட் ஹாக்-ஐ(high-speed hawkeye) கேமராக்களைப் பயன்படுத்துகிறது.
இந்த கேமராக்கள், டிவி நடுவருக்கு ரியல்-டைம் மற்றும் பல்வேறு கோணங்களில் காட்சிகளை வழங்குகின்றன, இதன் மூலம் மறுபரிசீலனை முடிவுகளை விரைவுபடுத்துகிறது.
இது டிவி இயக்குநரின் இடைத்தரகர் பங்கை நீக்கி, நடுவருக்கு பல்வேறு காட்சிகளைப் பார்க்க அதிகாரம் அளிக்கிறது.
நாணய சுழற்சிக்கு முன் அணி அறிவிப்பு இல்லை(No More Pre-Declared Teams)
டாஸ் வென்ற பின்னர், கேப்டன்கள் தங்கள் இறுதி playing XI ஐ, நான்கு நியமிக்கப்பட்ட மாற்று வீரர்களுடன் சேர்த்து அறிவிக்க முடியும்
இதன் மூலம் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய வேண்டுமா அல்லது பந்து வீச வேண்டுமா என்பதை பொறுத்து அவர்கள் தங்கள் அணி அமைப்பை மாற்றிக்கொள்ள முடியும்.
DRS விரிவாக்கம் (DRS Gets Wider Scope)
முடிவு மீதான மறுபரிசீலனை முறை (DRS) அதன் எல்லைகளை விரிவுபடுத்தியுள்ளது.
நடுவரின் wides மற்றும் no-balls தீர்ப்புகளை இப்போது கேள்விக்குள்ளாக்க முடியும், இதன் மூலம் அணிகளுக்கு தவறுகளை சரிசெய்ய ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
IPL 2024 New Rules, IPL 2024 Game Changers, IPL 2024 Most Exciting Changes, Supercharged IPL: New Rules Explained, DRS Expansion in IPL 2024, Impact Player Rule: Back in IPL 2024?, No Pre-Declared Teams: IPL 2024 Surprise Tactic, Double Bouncers in IPL 2024: Advantage Bowlers?, How New Rules Will Spice Up IPL 2024, Get Ready for a Thrilling IPL 2024 with New Rules, IPL 2024: More Drama, More Strategy with New Rules,