IPL 2024: இனி 'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்' இல்லை - அணி நிர்வாகத்தின் திடீர் முடிவு
IPL தொடரில் இனி 'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்' கிடையாது என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
IPL 2024
2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் மார்ச் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடவுள்ளனர்.
முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணையை மாத்திரமே வெளியிடப்பட்டுள்ளது. மற்றைய போட்டிகளும் இந்தியாவிலேயே நிகழும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இனி 'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்' இல்லை என அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அணி நிர்வாகத்தின் திடீர் முடிவு
RCB அணியின் நிர்வாகம் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதில் 'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்' என்ற பெயரில் விளையாடிக்கொண்டிருந்த அணி இனி 'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு' என்ற பெயரில் விளையாடும் என தெரிவிக்கட்டுள்ளது.
இந்த பெயர் மாற்றமானது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து RCB அணி பெங்களூர் என்ற பெயரிலேயே விளையாடி வந்தது.
2014 ஆம் ஆண்டு கர்நாடக மாநில தலைநகரான பெங்களூர், பெங்களூரு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
ஆனால் கடந்த ஆண்டு வரையில் RCB அணியானது பெங்களூர் என்ற பெயரிலேயே விளையாடி வந்தது. இந்நிலையில் தற்போது பெயரையும் மாற்றிக்கொள்வதற்கு அணி முடிவு செய்துள்ளது.
இதனடிப்படையில் RCB அணி 'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு' (Royal Challengers Bengaluru) என இனி வரும் நாட்களில் அழைக்கப்படும்.