பந்துகளை பறக்கவிட்ட சாம்சன்: 194 இலக்கு… தடுமாறும் லக்னோ அணி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு 194 ஓட்டங்களை இலக்காக வைத்துள்ளது.
முதல் பேட்டிங்
ஐபிஎல் 2024 ன் 4வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிகளை மோதி வருகின்றனர்.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதிரடியாக தொடங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 பந்துகளில் 24 ஓட்டங்கள் குவித்து அவுட்டானார்.
Your Sunday blockbuster ft. Sanju Chetta and Riyan ParAAG! ?? pic.twitter.com/cmZQ6OJcU9
— Rajasthan Royals (@rajasthanroyals) March 24, 2024
பின்னர் வந்த கேப்டன் சாம்சன், ரியான் பராக் உடன் ஜோடி சேர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஓட்டங்களை அதிகரித்தனர்.
சாம்சன்52 பந்துகளில் 6 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் விளாசி 82 ஓட்டங்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ரியான் பராக் 29 பந்துகளில் 43 ஓட்டங்கள் குவித்து நவீன் உல் ஹக் பந்துவீச்சில் அவுட்டானர்.
இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களை குவித்துள்ளது.
தடுமாறும் லக்னோ
சற்று கடினமான இலக்குடன் லக்னோ அணியில் ஆரம்பம் முதலே தடுமாற்றம் இருந்து வருகிறது.
1-1 ⚡? pic.twitter.com/zCVPH4srVi
— Rajasthan Royals (@rajasthanroyals) March 24, 2024
முன்னணி வீரர்கள் டி காக்(4), படிக்கல்(0), பதோனி(1) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் வெளியேறி அதிர்ச்சி தந்துள்ளனர்.
தற்போது கேப்டன் கே.எல் ராகுல்(2), மற்றும் தீபக் ஹூடா(16) களத்தில் போராடி வருகின்றனர்.
இதுவரை 4.2 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 27 ஓட்டங்கள் குவித்து விளையாடி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |