CSK vs MI - டிக்கெட் பெறுவது எப்படி? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு
சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை மும்பை போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை vs மும்பை
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 18வது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22 ஆம் திகதி தொடங்கி மே 25 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
மார்ச் 22ஆம் திகதி கொல்கத்தாவில் நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகிறது.
அதற்கு அடுத்ததாக மார்ச் 23 ஆம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகிறது. இந்த போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்கும்.
டிக்கெட் பெறுவது எப்படி?
இந்த போட்டிக்கான டிக்கெட் எப்படி பெறுவது என்பது குறித்து பார்க்கலாம். இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 19 ஆம் திகதி காலை 10:30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிக்கெட்டுகளை www.chennaisuperkings.com மற்றும் District.in இணையதளம் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம். ஒரு நபர் 2 டிக்கெட் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
CSKவின் இணையதளத்தில் நடைபெறும் Quiz போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவருக்கு சென்னை அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை வெல்ல வாய்ப்புகள் உள்ளன.
டிக்கெட் பெற்றவர்கள் மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்துகளில் மைதானத்திற்கு இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம்.
டிக்கெட் விலை
சி/டி/ இ லோயர் - ரூ.1700
ஐ/ஜே/ கே அப்பர் - ரூ.2500
சி/டி/இ அப்பர் - ரூ.3,500
ஐ/ஜே/கே லோயர் - ரூ.4000
கே.எம்.கே. டெர்ரஸ் - ரூ.7,500
5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி என்பதால் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |