தடுமாறிய சன்ரைசர்ஸ் அணி! குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs குஜராத் டைட்டன்ஸ்
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற பரபரப்பான போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இதில் நாணய சுழற்சியில் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கிய நிலையில், அபிஷேக் சர்மா 18 ஓட்டங்களும், டிராவிஸ் ஹெட் 8 ஓட்டங்களும் குவித்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து வந்த வீரர்களும் குஜராத் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 152 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி
153 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் 5 ஓட்டங்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்த நிலையில், ற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 61 ஓட்டங்கள் குவித்தார்.
பின்னர் வந்த வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடி 49 ஓட்டங்கள் சேர்த்தார்.
இறுதியில், ரூதர்ஃபோர்ட் 35 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |