கடைசி திக் திக் நிமிடங்கள்..! டெல்லியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அசத்தல் வெற்றி
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி நம்பமுடியாத வெற்றியை பதிவு செய்துள்ளது.
டெல்லி vs மும்பை
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த பரபரப்பான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
இரவு 7.30 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில், நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் ரியான் ரிகெல்டன் களமிறங்கினர்.
இதில் ரோகித் சர்மா 18 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க ரியான் ரிகெல்டன் அதிரடியாக ஆடி 25 பந்துகளில் 41 ஓட்டங்கள் குவித்தார்.
பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 40 ஓட்டங்களும், திலக் வர்மா 59 ஓட்டங்களும் விளாசினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 205 ஓட்டங்கள் குவித்தது.
வெற்றியை நழுவ விட்ட டெல்லி கேப்பிடல்ஸ்
206 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஜேக் பிரேசர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
ஆனால் பின்னர் ஜோடி சேர்ந்த அபிஷேக் போரெல், கருண் நாயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அபிஷேக் போரெல் 33 ஓட்டங்கள் எடுத்தார். கருண் நாயர் அதிரடியாக ஆடி 5 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகளுடன் 89 ஓட்டங்கள் குவித்தார்.
கிட்டத்தட்ட வெற்றியை டெல்லி கேப்பிடல்ஸ் உறுதி செய்த நிலையில், எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன.
18 வது ஓவரில் பும்ராவின் பந்துவீச்சில் அஷுதோஷ், குல்தீப் யாதவ் மற்றும் மோஹித் சர்மா ஆகியோர் அடுத்தடுத்து ரன் அவுட் ஆகினர்.
இதன் விளைவாக, 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து டெல்லி கேபிடல்ஸ் அணி எதிர்பாராத விதமாக தோல்வியைத் தழுவியது.
மேலும் இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
𝐍𝐞𝐯𝐞𝐫. 𝐂𝐨𝐮𝐧𝐭. 𝐔𝐬. 𝐎𝐮𝐭. 🔥pic.twitter.com/p7JxpJpIba
— Mumbai Indians (@mipaltan) April 13, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |