2026 ஐபிஎல் மினி ஏலம் - ரூ.2 கோடி அடிப்படை விலையில் வரும் 2 இந்திய வீரர்கள்
2026 ஐபிஎல் மினி ஏலத்திற்கு 2 இந்திய வீரர்கள் மட்டும் அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயித்துள்ளனர்.
2026 ஐபிஎல் மினி ஏலம்
2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 16 ஆம் திகதி அபுதாபியில் நடைபெற உள்ளது.

இந்த ஏலத்தில் கலந்து கொள்வதற்கு பெயரை பதிவு செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில், 1,355 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர்.

இதில், ஏலத்திற்கு வர விரும்பும் வீரர்களின் பட்டியலை ஐபிஎல் அணிகள் டிசம்பர் 5 ஆம் திகதி வெளியிட்ட பின்னர் வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். ஒரு அணியில் அதிகபட்சமாக 25 வீரர்கள் இடம்பெறலாம்.
கடந்த நவம்பர் 15 ஆம் திகதி, விடுவித்த மற்றும் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை 10 ஐபிஎல் அணிகளும் வெளியிட்டன. அதனடிப்படையில், 31 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 77 வீரர்கள் வாங்கப்பட்ட உள்ளனர்.
அதிகபட்சமாக KKR அணி ரூ.64.3 கோடி, CSK அணி ரூ.43.4 கோடி பர்ஸ் தொகையுடன் ஏலத்திற்கு வருகிறது.
2 இந்திய வீரர்கள்
ஆண்ட்ரே ரசல், மேக்ஸ்வெல், பாஃப் டூ பிளெஸஸிஸ், மொய்ன் அலி ஆகிய முன்னணி வீரர்கள் இந்த ஏலத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்யவில்லை.
காயம் காரணமாக கடந்த ஏலத்தில் பங்குபெறாத அவுஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன், இந்த ஏலத்தில் அதிக மதிப்பு மிக்க வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஏலத்தில் 45 வீரர்கள் தங்களது அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயித்துள்ளனர்.

இதில், ரவி பிஷ்னோய் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகிய 2 வீரர்கள் மட்டும் தங்களது அதிகபட்ச அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு வர உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |