RCB அணியை துவம்சம் செய்த GT: 15.5 ஓவரில் அபார வெற்றி
ஐபிஎல் லீக் போட்டியில் RCB அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி GT அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
155 ஓட்டங்களுக்கு சுருண்டது RCB
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 42 வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
THE CONTROVERSIAL CATCH - What are your thoughts on the decision? 👀 pic.twitter.com/rbrdEQtkRr
— Johns. (@CricCrazyJohns) April 30, 2026
இதனால் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய பெங்களூரு அணியில் படிக்கல் 42 ஓட்டங்களும், விராட் கோலி 28 ஓட்டங்களும் அதிகபட்சமாக குவித்தனர்.
இறுதியில் 19.2 ஓவர்கள் முடிவில் 155 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
குஜராத் அபார வெற்றி
Head-to-head stat
— MK Sharma ✍️ (@EmediaManoj) April 30, 2026
RCB vs GT have played 8 matches, and all 8 have been won by the chasing team#GTvsRCB #TATAIPL #Cricket #CricketTwitter pic.twitter.com/KXFWGbzEkE
எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 15.5 ஓவர்கள் முடிவிலேயே 6 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்கள் குவித்தது.
குஜராத் அணியில் கேப்டன் சுப்மன் கில் 43 ஓட்டங்களும் மற்றும் ஜாஸ் பட்லர் 39 ஓட்டங்களும் குவித்தனர். இதன் மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |