லக்னோ நிர்ணயித்த இமாலய இலக்கு: அபார வெற்றியை பதிவு செய்த மும்பை
லக்னோ அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இமாலய இலக்கை நிர்ணயித்த லக்னோ
ஐபிஎல்லில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
Himmat + Markram = KADAK PARTNERSHIP 👊⚡pic.twitter.com/Vh2QksluZo
— Lucknow Super Giants (@LucknowIPL) May 4, 2026
அதன்படி முதல் பேட்டிங்கில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 228 ஓட்டங்கள் குவித்தது.
லக்னோ அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 44 ஓட்டங்களும், நிக்கோலஸ் பூரன் 63 ஓட்டங்கள் குவித்தனர்.
மும்பை அபார வெற்றி

229 ஓட்டங்கள் எடுத்த வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் தொடக்க வீரர்களான ரியான் ரிக்கில்டன்(83 ஓட்டங்கள்) மற்றும் ரோகித் சர்மா(84 ஓட்டங்கள்) அதிரடியான தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர்.
பின்னர் வந்த நமன் திர் 23 ஓட்டங்களை விளாசிய நிலையில் 18.4 ஓவர்கள் முடிவிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 229 அபார வெற்றி பெற்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |