10 பில்லியன் டொலருக்கு அதிநவீன போர் விமானங்கள்: பாதுகாப்பை பலப்படுத்தும் இஸ்ரேல்
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கிட்டத்தட்ட 10 பில்லியன் டொலர் மதிப்பில் போர் விமானங்கள் வாங்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
பிராந்திய பதற்றம்
சமீபத்திய காலமாக காசா மற்றும் லெபனான் உடன் இஸ்ரேல் நேரடி மோதலில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் அமெரிக்க படைகளுடன் இணைந்து ஈரானுடனும் போர் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் அடுத்த 10 வருடங்களுக்கு நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையில் இஸ்ரேல் களமிறங்கியது.

போர் விமானங்கள் வாங்க திட்டம்
அந்த வகையில் கிட்டத்தட்ட 10 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பு போர் விமானங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் வாங்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக லாக்ஹீட் மார்ட்டின். மற்றும் போயிங் ஆகிய இரண்டு நிறுவனங்களிடம் இருந்து F-35 Lightning II மற்றும் F-15IA அதிநவீன போர் விமானங்களை வாங்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.
இதற்கான ஒப்புதலை இஸ்ரேலிய அமைச்சரவை சமீபத்தில் வழங்கியுள்ளது.
வாங்கப்படும் போர் விமானங்கள் 2030 ஆண்டுக்குள் டெலிவரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |