க்ருனால் பாண்டியா அதிரடி: மும்பையை வீழ்த்தி பெங்களூரு த்ரில் வெற்றி
ஐபிஎல் 2026ம் ஆண்டில் டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இலக்கை நிர்ணயித்த மும்பை
ஐபிஎல் 54வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்அளுரூ அணிகள் மோதின.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதல் பேட்டிங்கில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
மும்பை அணியில் நமன் தீர் 32 பந்துகளில் 47 ஓட்டங்கள் குவித்தார். திலக் வர்மா கடைசி வரை போராடி 42 பந்துகளில் 57 ஓட்டங்கள் குவித்தார்.
RCB த்ரில் வெற்றி
ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் அணியின், தொடக்க வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.

ஜேக்கப் 27 பந்துகளில் 26 ஓட்டங்கள் குவித்து வெளியேறினார். கடைசி வரை களத்தில் இருந்து போராடிய க்ரூனல் பாண்டியா 46 பந்துகளில் 73 ஓட்டங்கள் குவித்தார் கடைசி பந்தில் 2 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது அதை வெற்றிகரமாக கடந்து பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 167 ஓட்டங்கள் குவித்து த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |