மாலியில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல்: 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதில் அதிர்ச்சி
மாலியில் நடைபெற்று வரும் பயங்கரவாத தாக்குதலில் கடந்த சில மணி நேரத்தில் மட்டும் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
மாலியில் பயங்கரவாத தாக்குதல்
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடந்த புதன்கிழமை பயங்கரவாதிகள் கும்பலால் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் 24 பேர் வரை கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் மாலியில் பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 70 க்கும் மேலாக அதிகரித்துள்ளது.
BREAKING: Mali's Defence Minister Sadio Camara killed after terrorists attack his house in Kati town, some 15 kilometres northwest of the capital Bamako, on Saturday, Al Jazeera reports pic.twitter.com/Pm8pUmMOUJ
— TRT Afrika (@trtafrika) April 26, 2026
வெள்ளிக்கிழமை மற்றொரு தாக்குதலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அல் கொய்தா மற்றும் அல் ஜமாத் நுஸ்ரத் அல் - இஸ்லாம் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
இந்த பயங்கரவாத அமைப்புகள், அவர்களின் நிபந்தனைக்கு கட்டுப்படாத கிராங்களை தாக்கி அராஜகத்தில் ஈட்பட்டு வருகின்றனர்.
ஆயுதமேந்திய போராளிகள் மாலி தலைநகர் பாமகோவிற்கு அருகிலுள்ள மத்திய சிறையை தாக்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

மேலும் குறிப்பிட்ட வேறு சில நகரங்களையும் குறிவைத்தி தாக்குதல் நடத்த போவதாக பயங்கரவாத அமைப்புகள் எச்சரித்துள்ளது.
கடந்த வாரம் பயங்கரவாத அமைப்புகள் நடத்திய தாக்குதல் அந்நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் சாடியோ கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |