ஐபிஎல் போட்டியில் ஸ்டெம்ப் மற்றும் பெயில்ஸை தெறிக்கவிட்ட அஸ்வின்! பாராட்டி தள்ளிய மலிங்கா
ஐபிஎல் போட்டியில் ஆண்ட்ரே ரசலை க்ளீன் போல்ட் ஆக்கிய அஸ்வினை ஜாம்பவான் லசித் மலிங்கா பாராட்டியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிய போட்டியில் கொல்கத்தா வீரர் ஆண்ட்ரே ரசல் 3வது விக்கெட்டுக்கு களமிறங்கினார்.
அவருக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் வைட் அங்கிளில் இருந்து வந்து பந்து வீசினார். அப்போது ரசல் பேட்டை தாண்டி சென்ற பந்து ஆஃப்-ஸ்டம்பை பதம் பார்த்தது. இதையடுத்து கோல்டன் டக் அவுட்டானார் ரசல்.
Ashwin’s Magic??
— Lasith Malinga (@ninety9sl) April 19, 2022
Special, special delivery by @ashwinravi99?#Royalsfamily #HallaBol #IPL2022 pic.twitter.com/ChHGdbctyV
இதையும் படிங்க: ஐபிஎல்! இலங்கை பவுலர் பந்தில் கோல்டன் டக் ஆன கோலி... துள்ளிகுதித்து கொண்டாடிய வீடியோ
அஸ்வின் அபாரமாக பந்து வீசி எடுத்த இந்த விக்கெட்டை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளரான இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்கா பாராட்டியுள்ளார்.
அவரின் டுவிட்டர் பதிவில், அஸ்வினின் மேஜிக். சிறப்பான பந்துவீச்சு என ஸ்டெம்ப் மற்றும் பெயில்ஸை அஸ்வின் தெறிக்கவிட்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.