அடிக்கடி முடங்கும் UPI சேவைகள் - ஐபிஎல் போட்டிகள் தான் காரணமா?
ஒரு மாதத்தில் அடிக்கடி UPI சேவைகள் முடங்கியதற்கு, ஐபிஎல் போட்டிகள் தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ச்சியாக முடங்கும் UPI சேவைகள்
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை மக்கள் பயன்படுத்த துவங்கிய பின்னர், வங்கி கணக்கில் பணப் பரிமாற்றம் செய்வது தொடங்கி பில் செலுத்துவது வரை அனைத்திற்கும் UPI செயலிகளையே நம்பியுள்ளனர்.
Google pay, PhonePe போன்ற UPI செயலிகள் மூலம், நொடிப்பொழுதில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில், 3 முறைக்கு மேல் திடீரென UPI பரிவர்த்தனைகள் முடங்கியது.
இதனால், UPI மூலம் பணம் செலுத்த முடியாமல், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் அவதியுற்றனர்.
யுபிஐ சர்வர்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாகவே, யுபிஐ சேவைகளில் முடக்கம் ஏற்பட்டதாக தேசிய பணப்பரிவர்த்தணை ஆணையமான என்பிசிஐ தெரிவித்தது.
மேலும், இது தொடர்பாக வங்கிகள் மற்றும் UPI செயலிகளுடன் NPCI ஆலோசனை நடத்தியது. இந்நிலையில், ஐபிஎல் போட்டிகள் காரணமாகவே இந்த முடக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் போட்டிகள்
18வது ஐபிஎல் தொடர், கடந்த மார்ச் 22 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டிகளுக்கு இந்தியா தாண்டி, உலகளவில் பெரிய வரவேற்பு உண்டு.
ஐபிஎல் தொடர் கிரிக்கெட் என்பதை தாண்டி, பணம் கொழிக்கும் சந்தையாக மாறியுள்ளது. ஐபிஎல் தொடரின் சந்தை மதிப்பு ரூ.1,00,000 கோடியை கடந்து விட்டது.
மேலும், ஐபிஎல் போட்டிகளின் போது, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ. 8.3 லட்சம் கோடி) அளவிற்கு சட்டவிரோத சூதாட்டம் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தவிர, Dream11 போன்ற சட்டப்பூர்வ செயலிகள் மூலம் பிற அதிர்ஷ்டக் குலுக்கல்களும் செய்யப்படுகின்றன. மேலும் இந்த சீசனில், பெரும்பாலான சட்டப்பூர்வ செயலிகள் தினசரி முதல் பரிசுகளாக ரூ.3 கோடி வரை வழங்குகின்றன.
இதன் காரணமாக, ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான பணப்பரிமாற்றம் நடைபெற்றதால், UPI சர்வர்கள் முடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |