ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலம் இன்று ஆரம்பம்! அதிக தொகைக்கு விலை போக வாய்ப்புள்ள வீரர்கள் யார்?
2023 ஆண்டு 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல்- மே மாதங்களில் நடக்கவுள்ளது.
ஐ.பி.எல். வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெறவுள்ளது.
ஏலப்பட்டியலில் 273 இந்தியர், 132 வெளிநாட்டவர் என்று மொத்தம் 405 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களில் இருந்து அதிகபட்சமாக 30 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 87 வீரர்கள் ஏலத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அதில் பென் ஸ்டோக்ஸ், சாம்கர்ரன், கிரீன் அதிக தொகைக்கு விலை போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் என்.ஜெகதீசன், முருகன் அஸ்வின் உள்பட16 தமிழக வீரர்களும் இந்த பட்டியலில் இருக்கிறார்கள்.
இந்த ஏலம் நிகழ்ச்சி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.