2025 IPL; டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு ஐபிஎல் ரசிகர் பூங்கா - தமிழ்நாட்டில் எங்கு அமைகிறது?
இந்தியா முழுவதும் 50 நகரங்களில் ஐபிஎல் ரசிகர் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
ஐபிஎல் ரசிகர் பூங்கா
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 18 வது ஐபிஎல் தொடர், நாளை (மார்ச் 22) தொடங்கி மே 25 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
ரசிகர்கள் இந்த போட்டிகளை மைதானத்திற்கு நேரில் சென்று காண ஆவலாக உள்ளனர். ஆனால் அனைத்து ரசிகர்களுக்கும் டிக்கெட் கிடைப்பதில்லை.
மார்ச் 23 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள சென்னை கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட் விற்பனை, தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது.
மைதானத்தில் 40,000 இருக்கைகளே உள்ள நிலையில், 2 லட்சம் ரசிகர்கள் டிக்கெட் பெறுவதற்காக இணையதளத்தில் காத்திருந்தனர்.
டிவி மற்றும் மொபைல் செயலியில் ஐபிஎல் போட்டிகளை காண முடிந்தாலும், மைதானத்தில் நேரில் காண ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
ரசிகர் பூங்காவில் உள்ள வசதிகள்
இந்நிலையில் டிக்கெட் கிடைக்காதவர்களுக்கும், மைதானத்தில் பார்க்கும் பார்வை அனுபவத்தை வழங்க, இந்தியா முழுவதும் 50 நகரங்களில் ஐபிஎல் ரசிகர் பூங்காகக்ளை அமைக்க பிசிசிஐ முன்வந்துள்ளது.
ரசிகர்களின் ஈடுபாட்டை அதிகரிக்க 2015 ஆம் ஆண்டு முதல் இந்த ரசிகர் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
2 போட்டிகள் நடைபெறும் நாட்களில் பிற்பகல் 1:30 மணிக்கும், ஒரு போட்டி நடைபெறும் நாட்களில் இந்திய மாலை 4 மணிக்கும் ரசிகர்கள் பூங்காவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
வார இறுதிகளில் அமைக்கப்படும் இந்த பூங்காவில், நுழைவுக்கட்டணம் இலவசம். இந்த பூங்காவில், இசை, பொழுதுபோக்கு, குழந்தைகளுக்கான விளையாட்டு மண்டலம், உணவு மைதானம், மெய்நிகர் துடுப்பாட்டம், வலைக்குள் பந்துவீச்சு பயிற்சி, முகத்தில் ஓவியம் வரைதல், replica dugouts, cheer-o-meter, 360° புகைப்பட அரங்குகள் ஆகிய சில செயல்பாடுகளுக்கு பணம் செலுத்த வேண்டி இருக்கும்.
தமிழ்நாட்டில் ஐபிஎல் ரசிகர் பூங்கா
தமிழ்நாட்டில் 4 பகுதிகளில் ஐபிஎல் ரசிகர் பூங்கா அமைய உள்ளது.
22, 23 மார்ச் - கோயம்புத்தூர்
29, 30 மார்ச் - திருநெல்வேலி
05, 06 ஏப்ரல் - மதுரை
03, 04 மே - திருச்சி
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |