Flying Kiss கொடுத்த KKR வேகப்பந்து வீச்சாளர்., அபராதத்துடன் IPL போட்டியில் தடை
IPL-ன் பதினேழாவது சீசனில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா (Harshit Rana) தனது தேவையற்ற சைகையால் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.
ஓரிரு விக்கெட்டுகளை வீழ்த்தி சத்தம் போடும் இந்த வேகப்பந்து வீச்சாளர் மீண்டும் ஐபிஎல் விதியை மீறியிருக்கிறார்.
இந்த முறை போட்டிக்கான கட்டணம் முழுவதையும் இழந்தது மட்டுமின்றி ஒரு போட்டியில் விளையாட தடையும் பெற்றார்.
என்ன நடந்தது..?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வாலுக்கு ‘Flying Kiss’ கொடுத்ததற்காக விமர்சிக்கப்பட்ட ஹர்ஷித், சமீபத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக விளையாடும்போதும் இதே போன்ற செயலை செய்துள்ளார்.
ஈடன் கார்டனில் அபிஷேக் போரலை (Abishek Porel) பவுல்டு செய்த ஹர்ஷித், வாயில் விரலை வைத்து பின் அவரை வெளியேறுமாறு சைகை செய்தார். உடனே தான் செய்த தவறை உணர்ந்து அவர் கைகளை மடக்கினார்.
Harshit Rana realized here pic.twitter.com/g6rT0k7jDM
— Gaurav Gulati (@gulatiLFC) April 30, 2024
ஹர்ஷித்தின் நடத்தை ஐபிஎல் ஒழுங்குக் குழுவிடம் போட்டியின் நடுவரால் தெரிவிக்கப்பட்டது. ஹராஷித் தனது குற்றத்தை கமிட்டி முன் ஒப்புக்கொண்டார்.
சென்றமுறை ஹைதராபாத் அணிக்கு எதிரான பறக்கும் முத்தக் கொண்டாட்டத்தின் மூலம் தனது கட்டணத்தில் 60 சதவீதத்தை இழந்ததார்.
ஆனால் அவர் மீண்டும் அதை செய்துள்ளதால் அவருக்கு பெரும் அடி விழுந்துள்ளது. இரண்டாவது Level 1 குற்றத்தின் விளைவாக ஒரு போட்டி தடை மற்றும் போட்டி கட்டணத்தில் 100 சதவீதம் குறைக்கப்பட்டது.
பதினேழாவது சீசனில், ராணா 8 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார். திங்கள்கிழமை டெல்லியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா 2வது இடத்தைப் பிடித்தது. அடுத்த ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் அணி, மே 3-ம் திகதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
IPL 2024 news, IPL News, Harshit Rana suspended, IPL Code of Conduct, KKR