தனியார் மயமாகும் BBL - அணிகளை வாங்க IPL உரிமையாளர்கள் ஆர்வம்
ipl owners eye on bbl after -privatisation: BBL தொடரில் அவுஸ்திரேலியா கிரிக்கெட் தனியார் மயத்தை அனுமதித்துள்ள நிலையில், இந்திய IPL உரிமையாளர்கள் அணிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகிறது.
தனியார் மயமாகும் BBL
2011 ஆம் ஆண்டு முதல் பிக் பாஸ் லீக் (Big Bash League - BBL) T20 தொடரை அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், நடத்தி வருகிறது. இதில் 8 அணிகள் பங்கு பெற்று வருகின்றன.
BBL தொடரை இந்தியாவில் பிரபலப்படுத்தும் வகையில், 2026 BBL தொடரின் தொடக்கப்போட்டி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், Big Bash League போட்டிகளில் தனியார் முதலீட்டை அனுமதிக்க அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முன்வந்துள்ளது.
அதேவேளையில். சர்வதேசப் போட்டிகளின் அட்டவணை, வீரர்களின் பங்கேற்பு, ஒளிபரப்பு உரிமைகள் மற்றும் சம்பள உச்சவரம்புகள் ஆகியவற்றின் மீதான கட்டுப்பாட்டை அவுஸ்திரேலிய வாரியம் தக்கவைத்துக் கொள்ள உள்ளது.
மேலும், வருங்கால வாங்குபவர்களை அங்கீகரிக்கவோ அல்லது நிராகரிக்கவோ தெளிவான அதிகாரத்தையும் கொண்டுள்ளது.
இந்திய உரிமையாளர்களுக்கு அதிகபட்சமாக 2 அல்லது 3 அணிகள் மட்டுமே விற்கப்படலாம் என கூறப்படுகிறது.
2027-28 BBL தொடரில், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை முழுமையாக விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியின் விற்பனை வெற்றிகரமாக நிறைவேறினால், மற்ற அணிகளும் இதே முறையை பின்பற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது.
ஐபிஎல் உரிமையாளர்கள் ஆர்வம்
தங்களது உலகளாவிய கிரிக்கெட் வணிகங்களை விரிவுபடுத்த விரும்பும் ஐபிஎல் உரிமையாளர்களுக்கு ஒரு பெரிய புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

ஐபிஎல் உரிமையாளர்கள், SA20, ILT20, MLC ஆகிய கிரிக்கெட் லீக்களில் ஏற்கனவே சொந்தமாக அணிகளை வைத்துள்ளன.
இந்திய ஆண்கள் கிரிக்கெட் வீரர்கள் தற்போது வெளிநாட்டு ஃபிரான்சைஸ் லீக்குகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை.
எதிர்காலத்தில் இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டால், ஐபிஎல் உரிமையாளர்களுக்கு இது பெரிய வாய்ப்பாக அமையும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |