சிக்சராக விளாசிய ராஜபக்சாவை க்ளீன் போல்ட் ஆக்கி வெளியேற்றிய சாஹல்! வைரலாகும் வீடியோ
ஐபிஎல் போட்டியில் பனுகா ராஜபக்சாவை சாஹல் க்ளீன் போல்ட் ஆக்கிய வீடியோ வைரலாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 52வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிய நிலையில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடும் இலங்கை வீரரன பனுகா ராஜபக்சா பவுண்டரிகள், சிக்சருமான விளாசினார். 18 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
அப்போது ராஜபக்சாவுக்கு ராஜஸ்தான் வீரர் யுஸ்வேந்திர சாஹல் பந்துவீசினார்.
இந்த பந்தை கிரீசை விட்டு ஏறி வந்து சிக்சருக்கு அடிக்க ராஜபக்சா முயன்றார்.
ஆனால் பந்து பேட்டில் படாமல் ஸ்டெம்பை பதம் பார்த்தது, இதையடுத்து ராஜபக்சா பெவிலியனுக்கு நடையை கட்டினார்.