கோடிகளில் கொட்டிய பண மழை! ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகை வாங்கப்பட்ட டாப் 10 வீரர்கள்!
IPL-2025ம் ஆண்டுக்கான வீரர்கள் மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25ம் திகதிகளில் நடைபெறும் என்று BCCI அறிவித்துள்ளது.
இந்த ஐபிஎல்-லில் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல் போன்ற முன்னணி இந்திய வீரர்களும், மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், பட்லர் போன்ற முன்னணி வீரர்களும் ஏலத்தில் பங்கேற்க உள்ளனர்.
2025 ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் மொத்தமாக 1575 வீரர்கள் பங்கேற்க உள்ள நிலையில், அணிக்கு அதிகபட்சமாக 25 பேர் என்ற கணக்கில் மொத்தமாக 204 வீரர்கள் வாங்கப்படலாம்.
இந்தியன் பிரீமியர் லீக்(IPL)என்பது கிரிக்கெட் உலகில் முன்னணி மற்றும் அதிக செல்வம் புரளும் விளையாட்டு தொடர்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அணிகள் தங்களுக்கான சிறந்த திறமையை கைப்பற்ற விரும்புவதால் வீரர்கள் அதிக விலைக்கு ஏலத்தில் வாங்கப்படுகிறார்கள்.
அவ்வாறு இதுவரை நடைபெற்ற ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட Top 10 வீரர்களின் பட்டியல் இதோ!
ஐபிஎல்-லில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட Top 10 வீரர்கள்
மிட்செல் ஸ்டார்க் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) - ரூ. 24.75 கோடி (2024)
அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், 2024 ஏலத்தில் KKR அணியால் ரூ. 24.75 கோடிக்கு வாங்கப்பட்டதே, ஐபிஎல் வரலாற்றில் மிகவும் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனை உருவாக்கியது.
பேட் கம்மின்ஸ் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) - ரூ. 20.50 கோடி (2024)
அவுஸ்திரேலிய All-rounder வீரரான பேட் கம்மின்ஸ், 2024 இல் SRH அணியால் ரூ. 20.50 கோடிக்குப் வாங்கபட்டார். இது ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது விலையுயர்ந்த வாங்குதலாக உள்ளது.
சாம் கரன் (புஞ்சாப் கிங்ஸ்) - ரூ. 18.50 கோடி (2023)
இங்கிலாந்து அணியின் All-rounder வீரரான சாம் கரன், PBKS அணியால் 2023 இல் ரூ. 18.50 கோடிக்கு வாங்கியபோது அதுவரையிலான ஐபிஎல் வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றார்.
கேமரூன் கிரீன் (மும்பை இந்தியன்ஸ்) - ரூ. 17.50 கோடி (2023)
அவுஸ்திரேலிய அணியின் All-rounder வீரரான, கேமரூன் கிரீன், 2023 இல் MI அணியால் ரூ. 17.50 கோடிக்கு வாங்கப்பட்டார். இது 2023 ஐபிஎல் ஏலத்தில் இரண்டாவது மிகவும் விலையுயர்ந்த வாங்குதலாக இருந்தது.
பென் ஸ்டோக்ஸ் (சென்னை சூப்பர் கிங்ஸ்) - ரூ. 16.25 கோடி (2023)
இங்கிலாந்து அணியின் All-rounder வீரரான பென் ஸ்டோக்ஸ், சில ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல்லுக்கு திரும்பி வந்த நிலையில், 2023 இல் CSK அவரை ரூ. 16.25 கோடிக்கு வாங்கியது.
கிரிஸ் மோரிஸ் (ராஜஸ்தான் ராயல்ஸ்) - ரூ. 16.25 கோடி (2021)
தென்னாப்பிரிக்க அணியின் All-rounder வீரரான கிரிஸ் மோரிஸ், 2021 இல் RR அணியால் ரூ. 16.25 கோடிக்கு வாங்கப்பட்டார். இந்த வாங்குதல் 2023 வரை ஐபிஎல் வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை அவருக்கு அளித்தது.
யுவராஜ் சிங் (டெல்லி டேர்டெவில்ஸ்) - ரூ. 16 கோடி (2015)
இந்திய அணியின் பிரபல மற்றும் All-rounder நட்சத்திரமான யுவராஜ் சிங், 2015 இல் DD அணியால் ரூ. 16 கோடிக்கு வாங்கப்பட்டார். இது அவருக்கு ஐபிஎல் வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த இந்திய வீரர் என்ற பெருமையை வழங்கியது.
நிக்கோலஸ் பூரன் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்) - ரூ. 16 கோடி (2023)
வெஸ்ட் இண்டியன் அணியின் விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேன், நிக்கோலஸ் பூரன், 2023 இல் LSG அணியால் ரூ. 16 கோடிக்கு வாங்கபட்டார். அவரது அசத்தலான அதிரடி பேட்டிங் அவருக்கு இந்த மதிப்பை வழங்கியது.
பேட் கம்மின்ஸ் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) - ரூ. 15.50 கோடி (2020)
அவுஸ்திரேலிய அணியின் All-rounder வீரரான பேட் கம்மின்ஸ், 2021 வரை ஐபிஎல் வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த வெளிநாட்டு வீரராக இருந்தார், KKR அணி 2020 இல் ரூ. 15.50 கோடிக்கு அவரை ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இஷான் கிஷன் (மும்பை இந்தியன்ஸ்) - ரூ. 15.25 கோடி (2022)
இந்திய விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன், MI அணியால் 2022-ல் ரூ. 15.25 கோடிக்கு வாங்கப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |