இனி CSK-வுக்கு வாய்ப்பு குறைவு: 10 ஆணிகளால் கடினமான சென்னை அணியின் ப்ளே-ஆஃப் கனவு!
சிஎஸ்கே அணி இனிவரும் போட்டியில் ஒன்றில் தோல்வி அடைந்தால் கூட ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது கடினமாகி விடும் என இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை அணி விளையாண்டுள்ள 3 போட்டிகளிலும் படுதோல்வி அடைந்துள்ளது.
அந்தவகையில், நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 180 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 126 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது, இதனால் சென்னை அணியின் ரன் ரேட் விகிதாசாரங்களும் அகல பாதாளத்திற்குள் சென்றுள்ளது.
இந்தநிலையில், இனிவரும் போட்டியில் ஒன்றில் சென்னை அணி தோல்வி அடைந்தாலும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது கடினமாக அமைத்துவிடும் என இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த தொடர் தோல்வியால் சென்னை அணியின் ரன் ரேட் விகிதாசாரங்கள் அகல பாதாளத்திற்குள் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஆண்டு 10 அணிகள் இடம்பெற்று இருப்பதால் எத்தனை புள்ளிகள் இருந்தால் டாப் 4 இடங்களுக்கு செல்ல முடியும் என்பது தெரியாமல் உள்ளதால் தற்போதைய தொடர் தோல்வி சென்னை அணிக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளார்.
தோனியின் நேர்மை இதுதான்... இணையத்தில் புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!