தமிழகத்தின் மதுபான விற்பனையில் களமிறங்கும் தோனி: முக்கிய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை!
தமிழகத்தில் 7 Ink Brews நிறுவனத்தின் Copter 7 என்ற மதுபானம் ஒன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் போட்டி தொடங்கியதில் இருந்து சென்னை அணிக்காக விளையாண்டு தமிழக மக்களால் "தல" என்று போற்றப்படும் அளவுக்கு தமிழகத்தின் முக்கிய நட்சத்திரமாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி மாறியுள்ளார்.
இவர் அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றாலும் சென்னை அணியில் தொடர்ந்து விளையாடி வரும் நிலையில் அணிக்காக சிறப்பான ஓட்டங்களை குவிக்காவிட்டாலும் அனைத்து போட்டிகளிலும் கட்டாயமாக களமிறங்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு தமிழகத்தில் தோனி புகழ் பெற்றுள்ளார்.
தோனியும் இதற்கு பிரதிபலனாக சென்னை தான் எனது இரண்டாவது வீடு என தெரிவித்து வருகிறார்.
இந்தநிலையில், மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 7 Ink Brews நிறுவனத்தின் Copter 7 என்ற மதுபானம்(BEER) ஒன்றை தமிழகத்தில் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளை தோனி மேற்கொண்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
7 Ink Brews நிறுவனத்தின் பங்குதாராகவும், தூதுவராகவும் தோனி செயல்பட்டு வரும் நிலையில், அந்தநிறுவனம் தற்போது தோனியின் புகழ்பெற்ற helicopter சிக்ஸரையும் அவரது ஜெர்சி எண் 7 இணைத்து Copter 7 என்ற மதுபானத்தை (BEER) மும்பை, பெங்களூரு, கோவா மற்றும் ராஞ்சி உள்ளிட்ட நகரங்களில் விற்பனை செய்து வருகிறது.
இதனைத்தொடர்ந்து தற்போது இந்த copter 7 மதுபானத்தை தமிழகத்தில் விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்காக தமிழகத்தின் முன்னணி மதுபான நிறுவனமான அக்கார்டு நிறுவனத்துடன் ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் தோனி தீவிரம் காட்டி வந்தாலும் தான் பங்குதாரக செயல்பட்டு வரும் நிறுவனத்தின் மதுபான வகையை தமிழகத்தில் அறிமுகப்படுவது தொடர்பான நடவடிக்கைகளையும் தோனி ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
தொடர் தோல்வியால் திணறும் மும்பை இந்தியன்ஸ்: பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி!