கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள்...ரசிகர்களுக்கு இதய வலியை ஏற்படுத்தி குஜராத் அணி திரில் வெற்றி!
ஐபிஎல்-லில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி கடைசி ஓவரில் நம்பமுடியாத திரில் வெற்றி பெற்றுள்ளது.
மும்பையின் பிரபோர்ன் மைதானத்தில் வைத்து நடைபெற்ற ஐபிஎல்-லின் 16வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்தனர்.
இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் வழக்கம் போலவே பந்துவீச்சை தேர்வு செய்தது.
What a player he is RAHUL TEWATIA just nailed it?????? pic.twitter.com/WzjKM6K4BC
— Shubh Tiwari (@ShubhritTiwari) April 8, 2022
இந்தநிலையில் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் கேப்டன் மயங்க் அகர்வால் மற்றும் பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்கத்திலேயே களத்தை விட்டு வெளியேறவே, 3வது விக்கெட்டுக்கு கைகோர்த்த தவான், லிவிங்ஸ்டோன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை நல்ல இலக்கை நோக்கி நகர்த்தினார்.
பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக தவான் 35 ஓட்டங்களையும், லிவிங்ஸ்டோன் 64 ஓட்டங்களையும் குவித்ததை தொடர்ந்து, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 189 ஓட்டங்களை சேர்த்து இருந்தது.
இதையடுத்து, சற்று கடினமான இலக்குடன் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அந்த அணியின் இளம் வீரர் சுப்மன் கில் பொறுப்புடன் விளையாடி அணிக்காக 96 ஓட்டங்கள் சேர்த்தார், இருப்பினும் ஆட்டத்தின் 18.5 வது ஓவரில் அவர் அவுட்டாகவே வெற்றி பஞ்சாப் அணி பக்கம் திரும்பியது.
Undoubtedly ?
— IndianPremierLeague (@IPL) April 8, 2022
A game to remember indeed ??#TATAIPL | #PBKSvGT | @ShubmanGill | @gujarat_titans pic.twitter.com/oF61X9OONO
ஆட்டத்தின் இறுதி ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் குஜராத் அணி வெற்றிபெற 12 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த அணியின் வீரர் Rahul Tewatia கடைசி இரண்டு பந்துகளில் 2 சிக்ஸர் அடித்து அணிக்கு நம்பமுடியாத வெற்றியை பெற்று கொடுத்துள்ளார்.
இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 20ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 190 ஓட்டங்களை சேர்த்து திரில் வெற்றி பெற்றுள்ளது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் சுப்மன் கில்லுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.