தோனியின் பேச்சை முதலில் கேட்கவேண்டும்...முகேஷ் சவுத்ரிக்கு சிஎஸ்கே வீரரின் அறிவுரை!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரின் அறிவுரையை கேட்டு நடந்தபிறகு தான் எனது பந்துவீச்சு முன்னேறியதாக சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த நிலையில், தற்போது பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்துள்ளது.
இதற்கு சிஎஸ்கே-வின் பலவினமான பந்துவீச்சே காரணம் என ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன, இருப்பினும் இந்த சீசனின் தொடகத்தில் மோசமாக பந்துவீசி வந்த முகேஷ் சவுத்ரி தற்போது நல்ல லெந்தில் பந்துவீச தொடங்கியுள்ளார்.
இதுதொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த முகேஷ் சவுத்ரி, தன்னுடைய பந்துவீச்சு தற்போது முன்னேறி இருப்பதற்கு சென்னை அணியின் அற்புதமான மற்றும் அனுபவஸ்த வீரர் தீபக் சாஹரின் அறிவுரைகளே காரணம் என தெரிவித்துள்ளார்.
மேலும் சூழ்நிலையை எப்படி அலசுவது, குறிப்பிட்ட சூழ்நிலையில் எந்தமாதிரியான பந்தை வீசுவது போன்ற அறிவுரைகளை தீபக் சாஹர் எனக்கு போன் செய்து வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
இந்த சீசனின் தொடக்கத்தில் நான் சிறப்பாக பந்துவீசவில்லை, ஆனால் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நான் 4 விக்கெட்களை கைப்பற்றினேன், மாஹி பாய் (தோனி) என்ன சொல்கிறாரோ அதன் படி நடக்கவேண்டும் என்ற தீபக் சாஹரின் அறிவுரையே காரணம் என தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: தல தோனி பீஸ்ட் விஜய் மாதிரி.. நடந்து வந்தா அதிரும்! தினேஷ் கார்த்திக்
சீசனின் தொடக்கத்தில், நான் மிகுந்த மன அழுத்ததில் இருந்தேன், அப்போது தீபக் சாஹரின் வார்த்தைகள் தான் எனக்கு ஊக்கமளித்தன எனவும் தெரிவித்துள்ளார்.