தொடர் தோல்வியால் திணறும் மும்பை இந்தியன்ஸ்: பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல்-லில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கடுமையாக போராடியும் தோல்வியையே மீண்டும் சந்தித்துள்ளது.
புனேவின் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின, இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை விறுவிறுவென உயர்த்தினர்.
Punjab Kings return to winning ways! ? ?
— IndianPremierLeague (@IPL) April 13, 2022
The Mayank Agarwal-led unit register their third win of the #TATAIPL 2022 as they beat Mumbai Indians by 12 runs. ? ?
Scorecard ▶️ https://t.co/emgSkWA94g#TATAIPL | #MIvPBKS pic.twitter.com/fupx2xD2dr
பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மயங்க் அகர்வால் மற்றும் தவான் இருவரும் அரைசதம் கடக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 198 ஓட்டங்கள் சேர்த்து இருந்தது.
இதனை தொடர்ந்து கடினமான இலக்குடன் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய மும்பை இந்தியன் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்களை மட்டுமே சேர்த்து தோல்வியை தழுவியது.
மும்பை அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை அதிகபட்சமாக டெவால்ட் ப்ரீவிஸ் 49 ஓட்டங்களை சேர்த்து இருந்து இருந்தார். பஞ்சாப் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை ஒடியன் ஸ்மித் 4 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.
மேலும் இந்தப்போட்டியில் வெற்றிபெற்றதை தொடர்ந்து, 32 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 52 ஓட்டங்கள் குவித்த பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார்.
ஐபிஎல்-லில் முன்னணி அணியான மும்பை இந்தியன்ஸ், இதுவரை விளையாண்ட நான்கு போட்டிகளும் படுதோல்வியை சந்தித்து இருந்த நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றிப் பெற்றாக வேண்டும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கியது, ஆனால் 5வது முறையாக தோல்வியை சந்தித்து இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
முதல் வெற்றியை மனைவிக்கு சமர்ப்பித்த ஜடேஜா: CSK-வை இனி தடுக்க முடியாது!