தோனியை பார்த்து பயங்கரமாக கத்தினேன்: ரவி சாஸ்திரியின் திக் திக் நிமிடங்கள்!
ஆசிய கோப்பையின் இறுதிப்போட்டியின் போது தோனியை எனது வாழ்நாளில் இதுவரை யாரையும் திட்டாத அளவிற்கு திட்டினேன் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
2022ம் ஆண்டுக்கான ஐபிஎல்-லில் போட்டிகளின் வர்ணனையாளராக மாறியுள்ள இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தான் இதுவரை யாரையும் திட்டாத அளவிற்கு தோனியை திட்டிய தருணத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில் ஆசியக் கோப்பையின் இறுதி போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள வேண்டியது இருந்தது, போட்டி தொடங்கி நாணய சுழற்சிக்கு 5 நிமிடங்களே இருக்கும் போது தோனி கால்பந்தை விளையாண்டு கொண்டிருந்தார், போட்டிக்கு முன்பு பனி வேறு அதிகமாக இருந்தது.
எனக்கு நல்ல நினைவு இருக்கிறது தோனி மைதானத்தில் கால்பந்து விளையாண்டு கொண்டிருக்கும் போது ஒருவிதமாக சரிக்கொண்டு சென்றார். அப்போது தான் என் வாழ்நாளில் நான் யாரையும் அப்படி கத்தியது இல்லை, அன்று தான் தோனியை உன் விளையாட்டை நிறுத்து என்று பயங்கரமாக கத்தினேன்.
அவர் கால்பந்தை பயங்கரமாக நேசிக்கிறார் என்பது தெரியும் இவற்றில் நம்மை பயமுறுத்தும் விசியம் என்னவென்றால் அவர் விளையாட்டின் தீவிரத்தில் காயமடையமாட்டார் என்பதற்கான எந்த உத்திரவாதமும் இல்லை, நீங்களே யோசித்து பாருங்கள் இறுதிப் போட்டிக்கு முன்பாக திடீரென தோனி ஆடமுடியாமல் போனால் என்ன ஆகும்? போட்டி தொடங்குவதற்கு வேறு 5 நிமிடங்கள் தான் இருந்தது என ரவி சாஸ்திரி பகிர்ந்து கொண்டார்.
ராஜஸ்தானை பந்தாடிய ஹார்டிக் பாண்டியா: குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி!