அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா: டெல்லியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் த்ரில் வெற்றி
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
பவுண்டரிகளை பறக்கவிட்ட அபிஷேக் சர்மா
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது, தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 36 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் விளாசி 67 ஓட்டங்கள் குவித்தார்.
Firebolts from Heiny ??pic.twitter.com/Y7rNqJtqHM
— SunRisers Hyderabad (@SunRisers) April 29, 2023
அவரை தொடர்ந்து கிளாசென் ஆட்டமிழக்காமல் 27 பந்துகளில் 53 ஓட்டங்கள் குவித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 197 ஓட்டங்கள் குவித்தது.
போராடி தோற்ற டெல்லி கேபிட்டல்ஸ்
இதையடுத்து இரண்டாவது பேட்டிங்குக்கு களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியின், கேப்டன் வார்னர் ஓட்டங்கள் எதுவும் குவிக்காமல் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.
ஆனால் பின்னர் சேர்ந்த பிலிப் சால்ட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஜோடி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தார்கள்.
Turning point of the match?
— IndianPremierLeague (@IPL) April 29, 2023
Akeal Hosein gets Mitchell Marsh out for 63!#DC require 60 off the final five overs ??
Follow the match ▶️ https://t.co/iOYYyw2zca #TATAIPL | #DCvSRH pic.twitter.com/LCIOKm5O6p
பிலிப் சால்ட் 35 பந்துகளில் 59 ஓட்டங்களும், மிட்செல் மார்ஷ் 39 பந்துகளில் 63 சேர்த்தனர். இருப்பினும் டெல்லி அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 188 ஓட்டங்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.
இதன் மூலம் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.