ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும் தமிழக வீரர்: ஹைதராபாத் அணிக்கு பின்னடைவு
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக வெளியேறியுள்ளார்.
பின்னடைவில் ஹைதராபாத்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 37 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன.
இதில் 8 போட்டிகளை விளையாடி உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் 7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலும் உள்ளது, டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு அடுத்தப்படியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் 7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது.
தமிழக வீரர் விலகல்
இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்-ரவுண்டர் பேட்ஸ்மேனான தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
Goodbyes are really hard ?
— SunRisers Hyderabad (@SunRisers) April 27, 2023
We are sure you will bounce back stronger, Washi ?? pic.twitter.com/1FYx3Yk4y8
வாஷிங்டன் சுந்தருக்கு கால் தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்த தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து வாஷிங்டன் சுந்தர் வெளியேறும் வீடியோவை அந்த அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.