யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று சர்ச்சையை சந்தித்த ஐபிஎஸ் அதிகாரி
ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று சர்ச்சையை சந்தித்துள்ளார்.
சர்ச்சையை சந்தித்த பெண்
இந்திய மாநிலமான ராஜஸ்தானை சேர்ந்தவர் பூர்வா. இவரது தந்தை ஓம்பிரகாஷ் ராஜஸ்தான் நிர்வாக சேவையில் (RAS) அதிகாரியாகவும், கோட்புட்லியில் கூடுதல் மாவட்ட ஆட்சியராகவும் உள்ளார்.
ஆரம்பத்திலிருந்தே ஒரு சிறந்த மாணவியாக இருந்த பூர்வா, அழகுக்காகவும் பேசப்பட்டார். தனது பள்ளி படிப்பை செயிண்ட் சேவியர்ஸிலும், கல்லூரி படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தின் லேடி ஸ்ரீ ராம் மகளிர் கல்லூரியிலும் முடித்தார்.
பின்பு யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற பூர்வா IPS பணியை பெற்று சர்ச்சையையும் சந்தித்தார்.
UPSC தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பூர்வாவின் பெயரில் 'OBC' என்று பட்டியலிடப்பட்டிருப்பதை சில பயனர்கள் கவனித்தனர்.
இதன் காரணமாக, அவரது தந்தையின் தற்போதைய பதவியைக் கருத்தில் கொண்டு அவரது தகுதியை கேள்விக்குள்ளாக்கத் தொடங்கினர்.
இதற்கு, விதிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை மக்கள் புரிந்து கொள்ளவில்லை என்று கூறி, அவரது தந்தை பதிலளித்தார்.
40 வயதிற்கு முன் நேரடி RAS ஆட்சேர்ப்பு விஷயத்தில், OBC NCL சலுகை பொருந்தாது. நான் 44 வயதில் RAS அதிகாரியானேன். எனவே, என் மகள் சான்றிதழை தவறாகப் பயன்படுத்தினார் என்ற கூற்று முற்றிலும் பொய்யானது என்று விளக்கமளித்தார் அவரது தந்தை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |