7300mAh பேட்டரி கொண்ட பிரமாண்ட ஸ்மார்ட்போன்! iQOO Z10 வெளியீடு எப்போது?
சீன ஸ்மார்ட்போன் பிராண்டான iQOO, தனது iQOO Z10 மொடலை இந்தியாவில் ஏப்ரல் 11 அன்று வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த புதிய மொடல் இந்தியாவில் இதுவரை வந்த அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் மிகப்பெரிய பேட்டரியைக் கொண்டிருக்கும் என நிறுவனத்தின் CEO நிபுண் மரியா (Nipun Marya) உறுதிப்படுத்தியுள்ளார்.
பேட்டரி மற்றும் முக்கிய அம்சங்கள்
இந்த iQOO Z10 மொடல் 7300mAh திறன் கொண்ட பெரும் பேட்டரியுடன் வரும். இது 90W Fast Charging ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய தொழில்நுட்ப விவரங்கள்
Display : 6.67-inch quad-curved AMOLED display, 2400 x 1080 pixel resolution, 120Hz refresh rate, 2000 nits peak brightness
Processor : Qualcomm Snapdragon 7s Gen 3
RAM மற்றும் Storage : 8GB / 12GB RAM, 128GB / 256GB Storage
Camera : 50MP Sony IMX882 Primary Sensor (OIS) + 2MP Sensor, முன்புறம் 32MP Selfie Camera
Platform : Android 15 அடிப்படையிலான Funtouch OS
விலை மற்றும் வெளியீடு
iQOO Z10 இந்தியாவில் ரூ.20,000 - ரூ.30,000 இடையே விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்குப் முன்பு, iQOO Z9 மொடல் ரூ.19,999 ஆரம்ப விலையில் வந்தது. மேலும், சீனாவில் iQOO Z10 மற்றும் Z10 Turbo மோதல்கள் அடுத்த மாதம் வெளியாக உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
IQOO Z10, IQOO Z10 PRICE, IQOO Z10 TURBO, IQOO Z10 5G, IQOO Z10 LAUNCH IN INDIA, iQOO Z10 launch date, iQOO Z10 india launch date