எங்கள் கப்பல் மீது உக்ரைன் கொடூர தாக்குதல்: பதிலடி கொடுப்போம் - ஈரான் பரபரப்பு
காஸ்பியன் கடலில் தங்கள் கப்பல் மீது உக்ரைன் கொடூர தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.
கப்பல்களைக் குறிவைத்து
ஈரானுடன் தொடர்புடைய இராணுவ சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களைக் குறிவைத்து, காஸ்பியன் கடலில் உக்ரைன் தொலைதூரத் தாக்குதல் நடத்தியதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, தங்கள் வர்த்தகக் கப்பல்களில் ஒன்றை உக்ரைன் தாக்கியதாகவும், அதில் ஒரு மாலுமி கொல்லப்பட்டதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம் என்றும் ஈரான் கூறியுள்ளது.
கொல்லப்பட்ட மாலுமி
அதேபோல், சனிக்கிழமை காலை நடந்த தாக்குதலால் கப்பல் வெடித்ததாகவும், அதில் மாலுமி கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் காயமடைந்ததாகவும் ஈரானின் வெளியுறவு அமைச்சகம் கூறியதாக அரசு செய்தி நிறுவனமான IRNA தெரிவித்துள்ளது.
காஸ்பியன் கடலை ஒட்டியுள்ள 5 நாடுகளில் ஈரானும், ரஷ்யாவும் அடங்கும். அங்கு ரஷ்யா தனது வலுவான கடற்படை இருப்பை நிலைநிறுத்தியுள்ளது.
இதனால், தொலைதூர இராணுவ நடவடிக்கைகளுக்கும், ஈரானுடனான மூலோபாய இணைப்புக்கும் இக்கடல் ஒரு முக்கிய பாதையாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |