அமெரிக்காவே நடுங்கும் ஈரானின் ரகசிய திட்டங்கள் - உலகிற்கு பேராபத்து
அமெரிக்கா தாக்குதலை தொடங்கினால் அதனை எதிர்கொள்ள ஈரான் வைத்துள்ள ரகசிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் ரகசிய திட்டங்கள்
ஈரான் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில், அமெரிக்கா தனது பாரிய விமானம் தாங்கி போர் கப்பல்களை ஈரான் நோக்கி அனுப்பி வருகிறது.

அமெரிக்கா தாக்குதலில் ஈடுபட்டால், கடுமையான பதிலடி கொடுக்கப்படும் ஈரான் எச்சரித்துள்ள நிலையில், ஒரு பாரிய போர் நிகழ்வதற்கான சாத்தியக்கூறு காணப்படுகிறது.
மத்திய கிழக்கில் உள்ள ஈரானின் ஆதரவு அமைப்புகளான ஹிஸ்புல்லா, ஹவுத்தியும் ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கும் என அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில், ஈரான் ஆயிரமாயிரம் அதிநவீன ட்ரோன்களை தங்களது ராணுவத்தில் இணைத்துள்ளது.

இந்த ட்ரோன்கள் தான் கடந்த ஆண்டு நடைபெற்ற இஸ்ரேலுடனான மோதலில் அதன் வான் பாதுகாப்பு அமைப்புகளை உடைத்து அதிர்ச்சி அளித்தது.
அதேவேளையில், போர் தொடங்கினால் தங்கள் நாடு பெருமளவு இழப்பை சந்திக்கும் என அஞ்சும் மத்திய கிழக்கில் உள்ள அண்டை நாடுகள் அமைதி பேச்சுவார்த்தையை வலியுறுத்துகின்றன.
அமெரிக்கா தாக்குதலை தொடங்கினால் ஈரான் பதிலடியாக என்ன மாதிரியான நகர்வுகளை மேற்கொள்ளும், இந்த போரினால் பிற நாடுகளுக்கு என்ன பாதிப்பு நிகழும் என இன்றைய அதிர்வு நிகழ்வில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |