யுரேனியத்தை ஒப்படைக்க ஈரான் சம்மதம்: மீண்டும் பேச்சுவார்த்தை: டிரம்ப் நம்பிக்கை
யூரேனியத்தை கைவிட ஈரான் ஒப்புக் கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது, இதனால் ஹார்முஸ் ஜலசந்தி திறந்து இருப்பதிலும் சிக்க ஏற்பட்டது.
ஈரான் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை கைவிட மறுப்பு தெரிவித்ததே பேச்சுவார்த்தை தோல்வியில் முடிய காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

தி நியூயார்க் டைம்ஸ் மற்றும் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஆகியவை வெளியிட்ட தகவலில், அணு ஆயுதங்கள் தயாரிக்க தேவைப்படும் யுரேனியம் செறிவூட்டலை 20 ஆண்டுகள் முடக்க அமெரிக்கா பரிந்துரைத்துள்ளது.
ஆனால் ஈரான் இதனை 5 ஆண்டுகள் வரை மட்டுமே கடைபிடிக்க முடியும் என்று தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
மீண்டும் தலைதூக்கும் நம்பிக்கை
அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் திருப்பி தர ஈரான் ஒப்புக் கொண்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த டிரம்ப், அமெரிக்கா-ஈரான் இடையே நல்ல ஒப்பந்தம் ஏற்பட தற்போது நல்ல வாய்ப்பு இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தையில் நல்ல முறையில் இறங்கி இருப்பதாகவும், இந்த ஒப்பந்தம் நிறைவேறினால் தடையற்ற உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கு ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே இருக்கும் என்றும் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |