ஈரானில் வலுக்கும் போராட்டங்கள்... நாட்டில் இருந்து தப்பிக்க உயர் தலைவர் அலி காமெனி திட்டம்
நாடு முழுவதும் போராட்டங்கள் மற்றும் இணைய முடக்கம் காரணமாக ஈரானின் முதன்மையான தலைவர்கள் பலர் பெரும் அழுத்தத்தை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
தப்பிச் செல்லலாம்
ஈரானில் கட்டிடங்கள் தீப்பிடித்து எரிய, வாகனங்கள் கவிழ்க்கப்பட்டு, தெருக்களில் சர்வாதிகாரத்திற்கு மரணம் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத்தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் நாட்டின் உயர் தலைவர் வெளியேறத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், ஆயத்துல்லா அலி காமெனி நாட்டைவிட்டு எங்காவது தப்பிக்க வேண்டும் என்று விரும்புகிறார், ரஷ்யா ஒரு சாத்தியமான நாடாக அவருக்கு முன்மொழியப்பட்டுள்ளது என்றார்.
ஈரானில் நடந்துவரும் மத அடிப்படையிலான ஆட்சியைக் காப்பாற்ற, அந்த நாட்டின் மதகுருமார்கள் நேற்று இரவு நாட்டின் 90 மில்லியன் குடிமக்களை உலகத் தொடர்புகளிலிருந்து துண்டித்தனர், எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் சேவையைத் தடுக்க இராணுவ தொழில்நுட்பத்தைக் கூட நாடினர்.
இணைய அணுகல் 1 சதவீத இணைப்புக்குக் குறைக்கப்பட்டது, தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டது மற்றும் கட்டண முறைகள் மூடப்பட்டன, போராட்டங்கள் 31 மாகாணங்களுக்கு பரவின.
மனித உரிமை ஆர்வலர்களின் தரவுகளின் அடிப்படையில், பதினைந்து நாட்களுக்கு முன்பு எழுச்சி தொடங்கியதிலிருந்து இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 62 ஆக உயர்ந்தது, 2,300 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் குதித்துள்ள மக்கள் பலர் தங்களுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை என்றே கூறியுள்ளனர். ஆனால், ஈரானில் தற்போதைய இந்த மோசமான நிலைக்கு டொனால்ட் ட்ரம்பே காரணம் என அலி காமெனி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமெரிக்க வல்லரசை மகிழ்விக்கவே, மக்கள் சொந்த நாட்டை நாசப்படுத்துகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ட்ரம்பின் கைகள் ஈரானியர்களின் இரத்தத்தால் கறைபட்டுள்ளன.
இராணுவ நடவடிக்கை உறுதி
இந்த மனிதர் தான் அதை கட்டளையிட்டதாகவும் கட்டுப்படுத்துவதாகவும் கூறினார். எனவே அவர் தனது கைகள் ஈரானிய இரத்தத்தால் கறைபட்டுள்ளதாக ஒப்புக்கொண்டார் என காமெனி ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டினரின் கூலிப்படையினராக செயல்படும் நாசக்காரர்களையும் கலகக்காரர்களையும் இஸ்லாமிய ஆட்சி பொறுத்துக்கொள்ளாது என்றும் காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால், ஈரான் அரசாங்கத்திற்கு எதிராக இராணுவ நடவடிக்கை உறுதி என ட்ரம்ப் பலமுறை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனிடையே, பிரித்தானியாவின் ஸ்டார்மர் அரசாங்கம் ஈரானிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க கோரியுள்ளது. இந்த நிலையில், ஈரானின் மறைந்த ஷாவின் நாடுகடத்தப்பட்ட மகனும், அமெரிக்காவைச் சேர்ந்தவருமான ரேசா பஹ்லவி, நேற்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் ஆதரவைக் கோரினார்.
தற்போது 65 வயதாகும் ரேசா பஹ்லவி ஈரானை விட்டு வெளியேறும்போது 15 வயது. ஈரானில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அவருக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்றே தகவல் கசிந்துள்ளது. அனைத்து ஈரானியர்களுக்கும் ஒரு ஜனநாயக எதிர்காலத்தை அவர் ஏற்கனவே உறுதியளித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |