பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய பதிலடி - இஸ்ரேல் மீதான தாக்குதல்களை நிறுத்திய ஈரான்
இஸ்ரேல் மீதான தாக்குதல்களை நிறுத்துவதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரான் - இஸ்ரேல் போர்
பிப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கிய நிலையில், பதிலுக்கு இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் தாக்குதலை தொடங்கியது.
6 வார காலமாக போர் நடைபெற்று வந்த இந்த போர், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தின் கீழ் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்து, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தன.

இந்நிலையில், லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் ஈரானை நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், மீண்டும் மத்திய கிழக்கில் போர் வெடிக்கும் சூழல் நிலவியது.
ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இந்தியர்கள் யாரும் பயணிக்க வேண்டாம் எனவும், அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
தாக்குதல்களை நிறுத்திய ஈரான்
ஈரான் மற்றும் இஸ்ரேல் உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார். .
இதன் பின்னர் தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்த ஈரான், சியோனிச ஆட்சியும் அதன் ஆதரவாளர்களும் ஒரு பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பதிலடி இது. தற்போது ஈரான் ராணுவம் தாக்குதல்களை நிறுத்துகிறது.

அதேவேளையில் லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்தால் மிகக்கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை, ஈரானின் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளையும் ரத்து செய்துவிட்டதாகவும், ஈரானின் மேற்கு வான்வெளி மூடப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
டிரம்பின் வேண்டுகோளை ஏற்று ஈரான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |