இனி எந்தக் கப்பலுக்கும் அனுமதி இல்லை... ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக அறிவித்த ஈரான்
பேச்சுவார்த்தைகளுக்கு நடுவே, தாக்குதல் நடத்திய அமெரிக்காவிற்கு பதிலளிக்கும் வகையில், ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஒரு தீர்வு எட்டாமல்
பிப்ரவரி மாதம் இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது போர் தொடுக்கும் முன்னர் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்திற்கு திறந்தே இருந்தது.

ஆனால் போர் தொடங்கியதன் பின்னர், ஹார்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது.
ஆனால் இதுவரை ஒரு தீர்வை எட்டாமல் பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது. இஸ்ரேலின் அழுத்தமே, பேச்சுவார்த்தையில் ஒரு தீர்வு எட்டாமல் போவதற்கு முதன்மை காரணமாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் சார்பில் அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் ஒரு ஒப்பந்தத்தை ஈரானிடம் இருந்து எதிர்பார்ப்பதால், பேச்சுவார்த்தைகளில் தீர்வு எட்டாமல் போவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்க ராணுவ ஹெலிகொப்டர் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்திவிட்டதாக ட்ரம்ப் கூறியதை அடுத்து, அமெரிக்கா செவ்வாய்க்கிழமை ஈரான் மீது தாக்குதல்களைத் தொடுத்தது.
இதனையடுத்து மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்ததாக IRGC தெரிவித்தது. ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், நேற்று நாங்கள் அவர்களைக் கடுமையாகத் தாக்கினோம்; இன்றும் அவர்களைக் கடுமையாகத் தாக்கப் போகிறோம் என்றார்.
இந்த நிலையில், மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக மற்றொரு சுற்றுத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க ராணுவம் புதன்கிழமை தெரிவித்தது.
தாக்குதலுக்கு இலக்காகும்
தீவிரமடைந்து வரும் தாக்குதல்கள் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளைப் பாதிக்கும் என அச்சுறுத்திய நிலையில், முடங்கியுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு ஈரான் விலை கொடுக்க நேரிடும் என ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.
இதனிடையே, ஈரானின் தேவையற்ற மற்றும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக, அந்நாட்டிலுள்ள பல இலக்குகள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணை மூடப்படுவதாகவும், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல முயற்சிக்கும் எண்ணெய் மற்றும் சரக்குக் கப்பல்கள் உட்பட எந்தவொரு கப்பலும் தாக்குதலுக்கு இலக்காகும் என்றும் ஈரான் தனது உயர்மட்டக் கூட்டு இராணுவத் தலைமையின் மூலம் வியாழக்கிழமை அன்று அறிவித்தது.
ட்ரம்பின் ஈரான் மீதான தொடர்ச்சியான இரண்டாவது நாள் தாக்குதல் மற்றும் ஹார்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரானின் அறிவிப்பு ஆகியவை, மத்திய கிழக்கில் பதற்றத்தையும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியையும் உருவாக்கும் என்றே அஞ்சப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |