பிராந்தியத்தின் நேரடி அச்சுறுத்தல் ஈரான்: ஏவுகணை தாக்குதலுக்கு கத்தார் கண்டனம்
ஈரான் பிராந்தியத்திற்கான மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று கத்தார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கத்தார் மீது ஈரான் தாக்குதல்
கத்தாரின் எரிசக்தி மையமான ராஸ் லஃப்பான்(Ras Laffan) தொழில் நகரத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், ஈரானுக்கு கத்தார் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஈரான் இந்த தாக்குதல் கத்தாரின் இறையாண்மைக்கும், ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுப்பதாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட தகவலில், பிராந்தியத்தில் வேண்டுமென்றே பதற்றத்தை அதிகரிக்க ஈரான் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.
கத்தார் பதிலடி கொடுக்கும்
மேலும் அந்த அறிக்கையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான ஈரான் மோதலில், சம்பந்தம் இல்லாத நடுநிலை நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி மோதலுக்கு வலுக்கட்டாயமாக இழுப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் ஈரான் இந்த தூண்டுதலுக்கு பதிலடி கொடுக்கும் உரிமை கத்தாருக்கு இருப்பதாகவும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய எந்தவொரு தயக்கமும் கத்தார் காட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |