போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில்.,ஐக்கிய அரபு அமீரகம் மீது ஏவுகணை தாக்குதல்
ஈரான் அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் வளைகுடா பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி உடன்படிக்கை
பல நாள் போர் தாக்குதலுக்கு ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே இரண்டு வார போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி தன்னுடைய சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட தகவலில், ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க ஈரான் ஒப்புக் கொண்டதையடுத்து ஈரான் மீதான தாக்குதலை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், அமெரிக்கா தங்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதை அடுத்தே இந்த போர் நிறுத்தம் ஏற்பட்டு இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
வளைகுடா பகுதியில் வான் தாக்குதல்
இந்நிலையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் பல வளைகுடா நாடுகள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்ட செய்தியில், ஈரானில் இருந்து வந்த அச்சுறுத்தல்களை தங்கள் நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக தடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் பாலிஸ்டிக் ஏவுகணைகள், குரூஸ் ஏவுகணைகள், மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடை மறிக்கப்பட்ட ஏவுகணைகளின் சிதறல்கள் விழுந்ததில் ஹப்ஷன் எரிவாயு வளாகத்தில் விபத்து ஏற்பட்டது.
மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு அமீரகத்தினர் மற்றும் ஒரு இந்தியர் என மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |