ஜோர்டான் மீது பாய்ந்த ஈரான் ஏவுகணை: கொல்லப்பட்ட 2 அமெரிக்க வீரர்கள், ஒருவர் மாயம்
ஜோர்டான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்
ஜோர்டான் மீது வெள்ளிக்கிழமை ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இரண்டு அமெரிக்க படை வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளை தலைமையகம்(CENTCOM) உறுதிப்படுத்தியுள்ளது.
ஜூலை 17ம் திகதி இந்த தாக்குதல் நடைபெற்று இருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதில் 2 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதுடன், ஒருவர் காணாமல் போய் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காயமடைந்த 4 அமெரிக்க வீரர்கள் உடனடியாக ஜோர்டானில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர்.
அமெரிக்க ராணுவத்தின் நெறிமுறைகள் படி, தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்கு பிறகே உயிரிழந்த வீரர்களின் விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் (CENTCOM) அறிவித்துள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இந்த மோதல் தொடங்கியதில் இருந்து 16 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 430 பேர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
CENTCOM Statement on Recently Fallen, Missing U.S. Service Members
— U.S. Central Command (@CENTCOM) July 18, 2026
TAMPA, Fla. — On July 17, two U.S. service members in Jordan were killed in action as U.S. Central Command (CENTCOM) and partner forces defended against Iranian ballistic missile and drone attacks. Additionally,…
அமெரிக்க வீரர்களின் உயிரிழப்பு தொடர்பான அறிக்கை வெளியாகியுள்ள அதே நேரத்தில், அமெரிக்காவுக்கு ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அதில், ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தாவிட்டால், அமெரிக்காவுக்கு மறக்க முடியாத பாடங்களை ஈரான் கற்பிக்கும் என்று எச்சரித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |