ஹார்முஸ் நீரிணையில் 2 வணிக கப்பல்களை குறி வைத்து தாக்கிய ஈரான்: UAE கடும் கண்டனம்
ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த 2 வணிக கப்பல்களை ஈரான் தாக்கி இருப்பதாக சவுதி அரேபியா குற்றஞ்சாட்டியுள்ளது.
வணிக கப்பல்கள் மீது தாக்குதல்
ஹார்முஸ் ஜலசந்தியில் சென்று கொண்டிருந்த தங்களது இரண்டு வணிக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதில் கப்பல் சேதமடைந்து இருப்பதாகவும், ஆனால் பணியாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் சவுதி தேசிய எண்ணெய் நிறுவனம்(ADNOC) தகவல் தெரிவித்துள்ளது.

ஒரு வார காலத்திற்குள் ADNOC நிறுவனத்தின் நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.
கடந்த சனிக்கிழமை ஹார்முஸில் சவுதி அரசு எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போதைய பதற்றமான நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் ADNOC கப்பல்கள் மீதான தாக்குதல் மிகவும் பகைமையான தாக்குதல் என்று குறிப்பிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |