நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும்

Donald Trump Israel-Iran conflict
By Arbin Mar 02, 2026 06:03 PM GMT
Report

ஈரானின் திருப்பியடிக்கும் துணிச்சல், ட்ரோன்களின் உற்பத்திக்கும் அவற்றைச் சுட்டு வீழ்த்துவதற்கான மிகப்பெரிய செலவுக்கும் இடையில் வளர்ந்து வரும் ஏற்றத்தாழ்வை அம்பலப்படுத்தியுள்ளது.

ஒரு அதிரவைக்கும் விவகாரம்

ஈரான் பயன்படுத்தும் சக்திவாய்ந்த ட்ரோன்களுக்கான உற்பதி செலவு என்பது தோராயமாக 35,000 டொலர் என்றே மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட மேற்கத்திய நாடுகளால் அதை சுட்டு வீழ்த்துவதற்கான செலவு குறைந்தது 500,000 டொலர் முதல் 4 மில்லியன் டொலர் வரை என மதிப்பிடுகின்றனர்.

நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் | Iran Attacks Indefinitely But

இப்படியான ஒரு அதிரவைக்கும் விவகாரம் தற்போதைய இஸ்ரேல் தொடங்கி வைத்த ஈரானுக்கு எதிரான போரில் அம்பலமாகியுள்ளது. இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் தொடுத்ததன் பின்னர்,

ஈரான் இஸ்ரேல் மீதும், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், கத்தார் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க மற்றும் நட்பு நாடுகளின் தளங்கள் மீதும் நிறுத்தாமல் சுழன்று தாக்குதல்களை நடத்துகிறது.

ஒரே நேரத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட முனைகளில் தாக்குதல்களைப் பரப்புவதன் மூலமும், ஒரு நாளைக்கு 2,500க்கும் மேற்பட்ட ட்ரோன்களைத் தக்கவைத்துக்கொள்வதன் மூலமும், ஈரான் அதன் எதிரிகளை தங்கள் பாதுகாப்பு அரண்களைப் பிரிக்க கட்டாயப்படுத்துகிறது.

மேலும், ஒரு தளத்தைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் ஏவுகணை அல்லது ட்ரோன் தடுப்பு அமைப்பான ஒவ்வொரு Interceptor-ம் வேறு எங்கும் பயன்படுத்த முடியாத ஒன்றாகும், ஏனெனில் interceptor-கள் வரையறுக்கப்பட்டவை.

அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் கப்பலை குறிவைத்த ஈரானின் ஏவுகணைகள்

அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் கப்பலை குறிவைத்த ஈரானின் ஏவுகணைகள்

மட்டுமின்றி, சில ஆயிரம் நீண்ட தூர ட்ரோன்களுக்குப் பதிலாக, ஈரானின் மொத்த ஷாஹெத் ட்ரோன் படையானது, அனைத்து வகையும் சேர்த்து 80,000 முதல் 100,000 வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் 500 ட்ரோன்கள் வரையில் உற்பத்தித் திறன் ஈரானுக்கு உள்ளது. தற்போதைய சூழலில் நாளுக்கு 2,500 ட்ரோன்களை ஈரான் பயன்படுத்தினாலும், ஒரு மாதம் வரையில் ஈரானால் துணிந்து செயல்பட முடியும்.

ஆனால் ஈரானின் இந்த ட்ரோன் தாக்குதலை முறியடிக்க இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் interceptor-கள் போதுமானதாக இல்லை என்றே மேற்கத்திய நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அதன் தாக்கம் தற்போதே தென்படத் தொடங்கியுள்ளதாகவும் நிபுணர்கள் தரப்பு குறிப்பிடுகின்றனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஈரான் மீதான 12 நாட்கள் போரில், இஸ்ரேலை பாதுகாக்கும் பொருட்டு அமெரிக்கா 150 THAAD interceptor-கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் | Iran Attacks Indefinitely But

அதாவது அமெரிக்கா அதன் கையிருப்பில் இருந்து தோராயமாக கால் பகுதியைப் பயன்படுத்தியுள்ளது. அந்த interceptor-கள் ஒவ்வொன்றும் சுமார் 15 மில்லியன் டொலர் மதிப்பிலானவை, மேலும் அதை மீண்டும் நிரப்ப மூன்று முதல் எட்டு ஆண்டுகள் வரை ஆகலாம்.

தற்போது, ​​ஈரானிய தாக்குதல்களின் தீவிரம் தொடர்வதால், ஒரே நேரத்தில் பல நாடுகளில் இந்த அமைப்புகளின் தேவை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க இராணுவத்தில் interceptor-கள் மட்டும் பற்றாக்குறையில் இல்லை, கடலில் இருந்து ஏவக்கூடிய Tomahawk ஏவுகணைகள் மற்றும் விமானத்தில் இருந்து ஏவக்குடிய ஆயுதங்களும் பற்றாக்குறையில் உள்ளது அம்பலமாகியுள்ளது.

பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே

இந்த நிலையில், ஈரானுடனான போர் நான்கு வாரங்களுக்கு தொடரக்கூடும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளதால், ஆபத்தான இந்த பற்றாக்குறை பெரும் சிக்கலாக வெடிக்கக் கூடும்.

மட்டுமின்றி, ஈரானின் இலக்கு யார் என்று கணிக்க முடியாத நிலையில், அமெரிக்காவிடம் போதுமான interceptor-கள் இல்லை. இதனால், மலிவான APKWS ராக்கெட்டுகளை ஈரான் ட்ரோன்களுக்கு எதிராக பயன்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது, ஒருமுறை பயன்படுத்த 28,000 டொலர் செலவாகும்.

சோதனை முயற்சியில் 100 சதவீதம் துல்லியம் என உறுதி செய்யப்பட்டுள்ளதால், தற்போது ஆயிரக்கணக்கான அமைப்புகளை நிறுவியுள்ளனர். இஸ்ரேலிடம் மிகவும் மலிவான Iron Beam laser அமைப்பு இருந்தாலும், வெறும் இரண்டு எண்ணிக்கை மட்டுமே வலுவாக உள்ளது.

நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் | Iran Attacks Indefinitely But

அது இஸ்ரேலுக்கு மட்டும் பயன்படக் கூடியது. இதனாலையே, தற்போது ஈரான் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளதாக ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.

ஆனால் ஈரானின் புதிய தேசிய பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி, அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் சிக்கி குவைத்தில் பல அமெரிக்க போர் விமானங்கள் விபத்துக்குள்ளானதாக குவைத்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US