டோகோ கொடி தாங்கிய கப்பல் மீது ஈரான் தாக்குதல்: IRGC விடுத்த எச்சரிக்கை
Iran attacks Togo-Flagged Tanker in Hormuz Strait: ஹார்முஸ் ஜலசந்தியில் டோகோ கொடி தாங்கிய கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது.
எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்
ஹார்முஸ் ஜலசந்தியில் சென்று கொண்டிருந்த டோகோ கொடி தாங்கிய எண்ணெய் கப்பல் ஒன்றை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர்(IRGC) வெற்றிகரமாக தாக்கி தீயிட்டு கொளுத்தியதாக தெரிவித்துள்ளது.
டோகோ கப்பல் அனுமதியின்றி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணம் செய்ததாக அரசுடன் தொடர்பில் உள்ள பார்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் அனுமதியின்றி பயணம் செய்யும் எந்தவொரு கப்பலுக்கும் அழிவை தவிர வேறு ஒன்றும் இல்லை என்று IRGC வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தூண்டுதல் மற்றும் ஏமாற்று வேலை காரணமாகவே இந்த கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியில் பயணம் செய்ய முயன்றதாக IRGC குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும் இப்பகுதியில் ஏற்பட கூடிய எந்தவொரு அத்துமீறலையும் ஈரானிய வீரர்கள் முறியடிக்க தயார் நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.